குழந்தை சுர்ஜித் உயிரை காவு வாங்கிய ஆழ்துளை கிணறு தற்போது எப்படியுள்ளது தெரியுமா?

569

குழந்தை சுர்ஜித்

குழந்தை சுர்ஜித்தின் உயிரை காவு வாங்கிய ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து சுர்ஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

தற்போது அனைவரும் சுர்ஜித் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தை சுஜித் விழுந்த 600 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது.

அருகாமையில் தோண்டப்பட்ட சுரங்கத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், தண்ணீர் வெளியேற்றப்பட்டு மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.