வவுனியாவில் வறுமையால் நடந்த கொ டுமை : இரு குழந்தைகளின் உ யிர் ப றிபோன ப ரிதாபம்!!

641

வவுனியாவில்

வளர்த்து ஆளாக்கி அழகான உடையுடுத்து அழகும் பார்க்கும் நேரத்தில் பெற்ற தாயே எ மனாகி த ண்ணீரில் த ள்ளிவிட்ட கொ டூரம் நேற்று முன்தினம் நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் நடந்தேறியது.

வாழ்க்கையில் வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடித்து பறந்த சிட்டுக்கள் இவர்கள். நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு எனும் கிராமத்தில் பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்தவர்களின் வாழ்க்கை பட்டென்று பறந்துபோனது சொல்லிலடங்காத வே தனை.


இந்த அ வலத்திற்கு தாய் மட்டுமா காரணம்? இல்லை சமூகப்பொறுப்புடைய நாம் அனைவருமே காரணம். கணவன் இ றந்த து யரம் வாழ்க்கையில் இளவயதுப்பெண்ணாக இரண்டு பிள்ளைகளுடன் எ திர்நீச்சலடிக்க இயலாத ப லவீனம், வ றுமை, வி ரக்தி எல்லாம் சேர்ந்து பிள்ளைகளைக் கொ ன்று விட்டு தானும் த ற்கொ லை செய்து கொள்ளும் ம னநிலைக்கு கொண்டு சென்றுவிட்டிருக்கிறது அந்த இளம் தாயை.

தாய் காப்பாற்றப்பட்டார் பிள்ளைகள் மூ ச்ச டங்கி ம ரணித்திருக்கிறார்கள் என்பது ஆகப் பிந்திய து யரம். ஒரு தாய் தான்பெற்று வளர்த்த பிள்ளைகளை கொ ல்ல நினைக்கிறாள் என்றால் தாயின் ம ன உ ளைச்சலை, து யரத்தை இலகுவாக கணித்திடமுடியும். அவ்வாறாயின் இந்த து யரத்திற்கு தாய்மட்டும் காரணம் என நாம் குற்றம் சாட்டிவிட முடியுமா?

ஒரு வீட்டில் மர ணம் நிகழ்ந்தால் ம ரணம் நிகழ்ந்து நான்கைந்து நாட்கள் குறித்த ம ரண வீட்டுக்கு படையெடுக்கும் நாம் அதன் பின்னர் அந்த வீட்டை எட்டிப்பார்ப்பதில்லை இது எங்கள் தேசத்தின் தேச வழமையாகி விட்டது.

குறித்த ஒரு வீட்டில் எதிர்பாராத ஒரு ம ரணம் நி கழ்ந்தால் அதுவும் ம ரணி த்தவர் குடும்பத்தின் தலைவனாகயிருந்தால் அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையென்ன கணவன் அல்லது குடும்பத் தலைவனில்லாது ஒரு பெண் குறித்த தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் எவ்வாறு முன்னேற்றுவாள் என்பது பற்றியெல்லாம் நாம் அலட்டிக்கொள்வதில்லை.

அதையும் தாண்டிய அ பத்தம் கணவனில்லாத அந்த வீட்டில் அடுப்பெரிகிறதா என்று கூட சிலநாட்களின் பின்னர் அயலவர்கள் எட்டிப்பார்ப்பதில்லை? ம ரண வீட்டுடன் பல நெருங்கிய உறவுகள் கூட ம ரணம் நிகழ்ந்த வீட்டை மறந்துவிடுகிறார்கள்.

சரி குறித்த குடும்பத்திற்கு உதவத்தான் முடியாது பணம் பொருளில்லை என்றாலும் அந்த வீட்டுக்கு சென்று ஆற்றுப்படுத்தி ஆதரவு கூறக்கூட எம்மில் ஒருவரும் தயாராகவில்லையே என்பது ஆகப்பிந்திய வே தனையே.

பட்டிக்குடியிருப்பில் நிகழ்ந்த து யரம் அவ்வாறானதே. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் வி பத்தின் போது தி டீர் ம ரணம டைந்த கணவனின் இ ழப்பினால் குறித்த குடும்பம் ஈடாடிப்போய்விடுகிறது.

கணவனைப் ப றிகொடுத்த து யரம் வி ரக்தி ஆற்றுப்படுத்தி ஆ தரவு தர யாருமில்லாத நிலை கணவன் இ றந்து மூன்று வாரங்கள் கடந்து விட்ட நிலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் உணவளித்து பராமரிக்க முடியாத வ றுமை எல்லாம் ஒருங்கே சேர்ந்து குறித்த இளம் தாயை த ற்கொ லை ம னநிலைக்கு மாற்றிவிடுகிறது.

குறித்த சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் கனகராயன் குளத்திலுள்ள தனது சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பிள்ளைகளையும் நிறை கி ணத்தில் த ள்ளி விட்டு தானும் ம ரணிக்க போவதாக கூறியுள்ளார் குறித்த தாய்.

கணவன் இ றந்த வி ரக்தியிலே தனது தங்கை இவ்வாறு புலம்புவதாக நினைத்து அவரை ஆ றுதல் படுத்தி விட்டு தொலைபேசியை து ண்டித்துள்ளார் சகோதரி. மறுநாள் சொன்னதைப் போலவே தனது சகோதரி த ற்கொ லை செய்துவிடுவார் என்று எள்ளளவும் நம்பவில்லை என்கிறார் அவர்.

ஆக எல்லாம் நடந்தேறி விட்டது. கணவனின் இ ழப்பு ஒருபுறம் பிள்ளைகளை தானே ப லியாக்கிவிட்டேனே என்ற மனக் கு டைச்சல் தோப்பாக வாழ்ந்து தற்போது தனித்த மரமாகியது எல்லாம் சேர்ந்து குறித்த பெண்ணையும் மீண்டுமொரு வி பரீத முடிவுக்கு இட்டுச்சென்றுவிடும் என்பதால் சமூகப்பொறுப்புணர்ந்து நடக்கவேண்டியது நம் எல்லோரதும் கடமையாகும்.

ஐந்து நாட்களாக ஆ ழ்து ளைக்கிணற்றில் வீ ழ்ந்த சிறுவனை மீ ட்டிட வேண்டுமென்று பிரார்த்தித்த உலகம் குறித்த சிறுவன் ஆ ழ்துளைக் கிணற்றில் வீ ழ்ந் ததற்கு சிறுவனின் தாய் தந்தையை கு ற்றம் சாட்டியது.

ஆனால் சிறுவனின் ம ரணத்திற்கு குடும்பம் மட்டும் பொறுப்பல்ல ஒட்டுமொத்த சமூகமுமே காரணம் என்பதைப்போல பட்டிக்குடியிருப்புத் து யரிற்கும் தாய் மட்டும் காரணமல்ல சமூகப்பொறுப்புடைய நாம் அனைவரும் தான் காரணம் எனும் கூட்டுப்பொறுப்பை ஏற்று எனிவரும் காலங்களில் எமது தேசத்தில் இவ்வாறான து யர்கள் ஏற்படாதிருக்க அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்.

-சமூக அக்கறையுள்ள ஒருவரின் மனக்குமுறல்-