வவுனியா வருகைதந்த ரணில் மக்களுக்கு கூறிய பல உறுதிமொழிகள்!!

542

வவுனியா வருகைதந்த ரணில்..

கா ணாமல் போன குடும்பங்களுக்கு இருக்க கூடிய து யரம் எமக்கு நன்றாக தெரியும். அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு சுயாதீனமான குழு ஒன்று ஸ்தாபிக்கபட்டுள்ளதுடன், நஸ்ட ஈடு வழங்குவது தொடர்பாகவும் ஆராய்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று (02.11) விஜயம் செய்த அவர் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதியதாக ஒரு அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் போது அதிகார பரவலாக்கல் ஏற்படுத்தப்படும் என சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச, குமாரதுங்க, ராஜபக்ச அரசாங்கங்களில் முன்வைக்கப்பட்ட ஒன்றிணைந்த நாடு எனும் கருத்துக்களை உள்ளடக்கி, அதனை ஆய்வு செய்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வவுனியா போன்ற பகுதிகளில் அனைத்து இனத்தவர்களும் வசிக்கிறார்கள். நாம் நினைப்பது நாட்டிலுள்ள அனைவரையும் இணைத்து அதிகார பரவாலாக்கல் என்ற வேலைதிட்டத்தை முன்னெடுப்பதாகும்.

போ ரின் காரணமாக பல சி க்கல்கள் தோன்றியுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவற்றை நாங்கள் நிவர்த்தி செய்திருக்கிறோம். எஞ்சியவற்றையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம்.

காணிகளை மீள கையளிப்பதுடன் கா ணாமல் போனோர் பற்றிய பி ரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்துடன் ஒருக்கிணைந்தவாறு சுஜாதீனமான ஒரு குழுவை ஸ்தாபித்திருக்கிறோம். இப்போ தைக்கு அவர்கள் சிறு சிறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறார்கள்.

அதேபோல அவர்களிற்கு நஸ்ட ஈடு வழங்கும் கால எல்லை தொடர்பாகவும் ஆராயபட்டுவருகிறது. காணாமல் போன குடும்பங்களுக்கு இருக்க கூடிய துயரம் எமக்கு நன்றாக தெரியும்.

அதே போல பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள் தொடர்பில் பல்வேறு வேலைதிட்டங்களை மேற்கொள்ளவிருப்பதுடன், போரில் காயமடைந்தவர்கள் தொடர்பிலும் நாம் கவனமெடுத்து வருகிறோம். போ ரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இன்று ப யமில்லாத அச்சமில்லாத, சட்டத்தின் மூலம் செயற்படுகின்ற ஒரு சமூகம் காணப்படுகின்றது. இவற்றை நாம் பாதுகாத்துக் கொண்டு முன்செல்ல வேண்டும்.

முக்கியமாக இங்கு கேட்பது வடக்கிற்கு நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்று. வடக்கை அபிவிருத்தி செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்பதை தெரிவிக்கிறேன்.

இலங்கையை அதிகூடிய மத்தியதர வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதே எமது நோக்கம். வன்னியில் விவசாய மீன்பிடி துறைகளை நவீனமயப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

நெல், மற்றும் தென்னை கால்நடை வளர்ப்பு உற்பத்தியை அதிகரிப்பதுடன். நாட்டின் வரட்சியான பகுதிகளிலும் உணவு உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

புதிய ஒரு பொருளாதார முறைமையை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கிறோம். அதற்காக விமானநிலையத்தை நாம் அங்கு திறந்துவைத்திருக்கிறோம்.

அதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். மன்னார் மற்றும் பூனகரி. வடமராட்சி போன்ற பகுதிகளில் சுற்றுலா வலையத்தை ஸ்தாபித்திருக்கிறோம். நிலாவெளியில் இருந்து வடக்கு நோக்கி சுற்றுலா பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.

இதன் மூலம் சுற்றுலா மற்றும் வர்த்தக துறையின் ஒரு கேந்திரநிலையமாக வவுனியா மாற்றி அமைக்கபடும். தற்போது வவுனியா வளாகம் பல்கலை களகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார், மதவாச்சி பகுதிகளிலே கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி தொழில் துறை கல்வியை ஏற்படுத்துவதும் எமது நோக்கமாக இருக்கிறது.

தொழில் மற்றும் வருமானமின்மை இந்த நாட்டின் இளைஞர்களுக்கு பெரிய பிரச்சினையாக அமைந்திருக்கிறது. அதனால் மிகப்பெரிய அபிவிருத்தியை இங்கு உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

எந்த இனமாக இருந்தாலும் ஏனைய சமூகங்களை போல வாழ்வதற்கு உரிமை இருக்கிறது. எமது முயற்சி நாட்டை அபிவிருத்தி செய்வது. இவற்றிற்கு பதில் சொல்லமுடியாத காரணத்தினால் தான் மொட்டு கட்சிக்காரர்கள் இனவாதம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் மீதும் குறை சொல்கிறார்கள். போ ரின் பின்னர் இவற்றை மாற்றி அமைப்பதற்கு போதுமான கால அவகாசம் இருந்தது.

ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை அந்த சவாலினை நாம் ஏற்று கொண்டிருக்கிறோம். எனவே எதிர்வரும் 16 ஆம் திகதி அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச்செய்து நல்லிணக்கத்தையும், அபிவிருத்தியையும் முன்கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.