வவுனியாவில் கோட்டபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக ஈ.பி.டி.பி னரின் தேர்தல் பிரச்சார மாநாடு!!

662

ஈ.பி.டி.பி னரின் தேர்தல் பிரச்சார மாநாடு

வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு இன்று (03.11.2019) காலை 10.30 மணி தொடக்கம் 1.30 மணிவரை இடம்பெற்றது.

கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், சர்வதேச இணைப்பாளர் விந்தன்,

முன்னாள் யாழ் மாவட்ட மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, கிழக்கு மாகாண ஊடக செயலாளர் ஸ்ராலின், தரணிக்குளம் வட்டார உறுப்பினர் இராஜேஸ்வரி,

கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் செல்வரத்தினம் சாந்தகுமார்,

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பாளர் கிறிஸ்தோபர் டினேஸ் றொசிண்டன் , கட்சியின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் கட்சியின் கொடியும் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன் வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை இடம்பெற்றதுடன் செயலாளர் நாயகம் அவர்களின் உரையுடன் மாநாடு நிறைவுற்றது.

மாநாட்டின் போது இடம்பெற்ற உரைகளில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.