வவுனியா நகரசபை கடிதத்தினை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்த தமிழரசுக் கட்சியின் நகரசபை உறுப்பினர்!!

625

வவுனியா நகரசபை கடிதத்தினை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்த கு ற்றச்சாட்டில் வவுனியா – இறம்பைக்குளம் வட்டார உறுப்பினர் ஒருவர் மீது நகரசபை செயலாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

குறித்த நகரசபை உறுப்பினர் மீது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

ஆனால் அவ் முறைப்பாடுகள் தொடர்பில் போதிய ஆதாரங்கள் இன்மையினால் எம்மால் நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை (01.11.2019) சோலைவரி பெயர் மாற்றத்திற்காக பொதுமகனொருவர் நகரசபைக்கு வருகை தந்திருந்தார். அந்த சமயத்தில் குறித்த பொதுமகனின் கையில் நகரசபையினால் வழங்கப்பட்டதென ஓர் ஆவணம் இருந்தது.

குறித்த ஆவணத்தினை ஊழியர்கள் பரீட்சித்த சமயத்தில் அக் கடிதம் போ லியாக தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாம் கடிதத்தினை எடுத்து வந்த பொதுமகனை அழைத்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில் வவுனியா தமிழரசுக் கட்சியின் இறம்பைக்குள உறுப்பினர் தான் எனக்கு சோலைவரி பெயர் மாற்றம் செய்ததாக தெரிவித்து இக் கடிதத்தினை தந்ததாக தெரிவித்தார்.

நகரசபையின் கடிதத்தினை போட்டோ பிரதி செய்து கடிதத்தினை மாற்றி நகரசபை செயலாளரின் சின்னம் மற்றும் அவரின் கையெழுத்தினை போலியாக இட்டு குறித்த நகரசபை உறுப்பினரால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன்,

தமிழரசு கட்சியின் இறம்பைக்குளம் வட்டார உறுப்பினருக்கு எமது நகரசபையினால் வேறொரு தேவைக்கான அனுப்பிய கடித்தினையே அவர் மாற்றியமைந்திருந்தமை அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் காணப்பட்ட இலக்கமும் குறித்த போலி கடிதத்தின் இலக்கமும் ஒன்றாக காணப்பட்டதன் அடிப்படையில் கண்டறியப்பட்டது.

இவ்வாறான விடயங்களின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (01.11.2019) நகரசபை செயலாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன்,
இன்றையதினம் (04.11.2019) விசாரணைக்காக பொலிஸார் இரு தரப்பினையும் அழைத்திருந்தனர்.

இதன் போது குறித்த தமிழரசுக் கட்சியின் நகரசபை உறுப்பினர் போலி கடிதத்தினை தானே தயாரித்தாகவும் அதற்கு மன்னிப்பு கடிதம் ஒன்றினையும் தருவதாக எமக்கு தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் நகரசபை உறுப்பினரின் நலனை கருத்தில் கொண்டு முறைப்பாடு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் குறித்த நகரசபை உறுப்பினருக்கு இனி இவ்வாறான செயலில் ஈடுபட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படமென பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குறித்த நகரசபை உறுப்பினர் தொடர்பில் எமக்கு இரு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் குறித்த நகரசபை உறுப்பினரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உங்களது ஆவணங்களை நகரசபையில் வந்து உண்மையில் நகரசபையினால் வழங்கப்பட்டதா? என சரிபார்த்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

போலி கடிதத்திற்கு இலஞ்சம் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் வினவிய சமயத்தில்,

இக் கடிதத்திற்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக என எமக்கு தெரியவில்லை. கடித்தினை வைத்திருந்த நபருக்கும் நகரசபை உறுப்பினருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது எனவும் அவரிடமிருந்து நகரசபை உறுப்பினர் பல உதவிகளை பெற்றுள்ளார் எனவும் கடிதத்தினை வைத்திருந்த நபரினால் எமக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

அதே சமயம் இன்று பொலிஸ் நிலையத்தில் அவர்களுக்கிடையே (கடிதம் வந்திருந்த நபர் – நகரசபை உறுப்பினர்) ஏற்பட்ட வா ய்த்தர்க்கத்தில் தனக்கு தறுமதியான பணத்தினை இன்று தருமாறும் கூறியிருந்தாக தெரிவித்தார்.