வவுனியாவில் இன்றும் நாளையும் இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு!!

562

தபால் மூல வாக்களிப்பு

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

வவுனியாவில் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிக்க தகுதிபெற்றோர் இன்று காலை 7.00 மணி முதல் வாக்களிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 31ம் திகதி மற்றும் 1ம் திகதி இடம்பெற்றிருந்ததுடன்,

இன்று (04.11.2019) பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

பொலிஸாருக்கான தபால் மூல வாக்களிப்பு வவுனியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெறுவதுடன் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இவர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளைய தினமும் (05.11.2019) இடம்பெறவுள்ளதுடன் வாக்களிக்க தவறிய ஏனைய அரச உத்தியோகத்தர்கள் வருகின்ற 7ம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வாக்களிக்க முடியுமென மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஐ.எம்.ஹனீபா தெரிவித்திருந்தார்.