வவுனியா கோவில்குளத்தில் சஜித்தின் பாரியார் பெண்களுடன் சந்திப்பு!!

399

சஜித்தின் பாரியார்

வவுனியா கோவிற்குளத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பாரியார் யாழினி பிரேமதாச பெண்களுடனான சந்திப்பு ஒன்றை இன்று (05.11) மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வானது சிவம் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கணேஸ் வேலாயுதம் தலைமைiயில் நடைபெற்றது.

சஜித் பிரேமதாசவின் பாரியார் யாழினி பிரேமதாச மற்றும் கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனாநாயக்கவும் கலந்துகொண்டு சஜித் பிரேமதாசவின் வாக்குறுதிகள் தொடர்பாக உரையாற்றியிருந்தார்.

தேசிய மகளிர் சாசனம் தொடர்பாக தெளிவுபடுத்திய ரோசி சேனநாயக்க, பாராளுமன்றத்தின் கீழ் பெண்களுக்கான சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படும், நீதிமன்றங்களில் பெண்கள், சிறுவர் தொடர்பான வழக்குகள் விரைவுபடுத்தப்படும்,

சுயதொழில் செய்யும் பெண்களுக்கு காப்பீடும் பயிற்சியும் வழங்கப்படும், நுண்கடன் வட்டியால் பா திக்கப்பட்ட பெண்களுக்கு கடன்சுமை தள்ளுபடி செய்யப்படும்,

கர்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்மாருக்கும் போசாக்கு உணவு வழங்கப்படும், குடும்பத்தில் தலைமையாகக் கொண்ட பெண்களுக்கு காணி, வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

பெண்களுக்கான இத்திட்டங்கள் அனைத்தும் சஜித் ஜனாதிபதியான மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவில்குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.