வவுனியாவில் நான்கு வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்!!

321

வவுனியாவில்..

வவுனியா நகரை அண்டிய சில பகுதியில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சோ தனை நடவடிக்கையின் போது நான்கு வர்த்தக நிலையங்களுக்கு எ திராக வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா தாண்டிக்குளம், திருநாவற்குளம் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தமை, விலை மற்றும் காலாவதி திகதி பொறிக்கப்படாத நிலையில் பொருட்களை விற்பனை செய்தமை,

விலைகள் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நான்கு வர்த்தக நிலையங்களிலிருந்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன.

குறித்த நான்கு வர்த்தக நிலையங்களுக்கு எ திராக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால் இம் மாதம் 19ம் திகதி வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் பல வர்த்தக நிலையங்களில் தி டீர் சோ தனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமையுடன் பல வர்த்தக நிலையங்களுக்கு எ திராக நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.