வவுனியாவில் மோட்டார் சைக்கிளை உடைத்து கொ ள்ளையடிக்க முற்பட்ட நபருக்கு நேர்ந்த கதி!!

2


வவுனியாவில்..


வவுனியா வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை உடைத்து கொ ள்ளையடிக்க முற்பட்ட நபரொருவர் பொது மக்களினால் ம டக்கிப் பி டிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளின் பெட்டியை உ டைத்து தி ருடுவதற்கு ஒருவர் முயன்றுள்ளார். இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை ம டக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.