வவுனியாவில் கா ணாமல்போன பல்கலைக்கழக மாணவன் ச டலமாக மீட்பு!!

330


பல்கலைக்கழக மாணவன்



வவுனியாவில் கா ணமல் போன யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் இன்று காட்டுப் பகுதியிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் நேற்றைய தினம், தடி வெ ட்டுவதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் கா ணாமல் போயிருந்தார்.



அப்பகுதி இளைஞர்கள், விசேட அ திரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட பல்வேறு தே டுதலின் பின்னர் இன்று முற்பகல் குறித்த மாணவன் காட்டிற்குள்ளிருந்த மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




காட்டிற்குள் கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உ யிரிழந்திருக்கலாம் என்று பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


ச டலம் நீதவானின் வருகையின் பின்னர் மருத்துவ சோ தனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு : வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குறிசுட்டகுளம் பகுதியில் இளைஞர் ஒருவர் கா ணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த இளைஞர் நேற்று காலை 7.30 மணியளவில் குறிசுட்ட குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து தடி வெ ட்டுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர்களால் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞர் சென்றதாக கூறப்பட்ட காட்டு பகுதியில் இளைஞர்கள் மற்றும் பொலிஸார் தீவிர தேடுதல் நடத்தியிருந்த நிலையில் நேற்று இரவு 11 மணிவரை அவர் தொடர்பில் எவ்வித தகவலும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் 23 வயதான மாணவரொருவரே கா ணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.