வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நீரிழிவு நோயாளர் தினம் அனுஸ்டிப்பு!!

351

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்

‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’ நவம்பர் 14 ம் திகதி நீரிழிவு நோயாளர் தினமாக உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகலாவிய ரீதியில் பல கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளர்கள் காணப்படுகின்றனா்.

அந்த வகையில் நீரிழிவு நோயை வெல்லவும் நீரிழிவு நோயுடன் வாழ்வை மகிழ்ச்சிகரமாக முன்னெடுக்கவும் எனும் தொனிப்பொருளில் நீரிழிவு மற்றும் அகஞ்சுரக்கும் தொகுதிகளின் பிரிவின் ஒழுங்கமைப்பின் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கண் தொடர்பான ஆலோசனை மண்டபத்தில் இன்று (14.11.2019) காலை 10.30 மணியளவில் நீரிழிவு நோயாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

நீரிழிவு மற்றும் அகஞ்சுரக்கும் தொகுதிகளின் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மகேசி அமரவர்த்தன தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்ததுடன்,

வைத்தியசாலையின் அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் , வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது நீரிழிவு நோய் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதுடன் நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் விளக்கம் வழங்கப்பட்டது.