வவுனியாவில் 2155 பா துகாப்புப் பிரிவினர் தேர்தல் பா துகாப்பு கடமையில்!!

277

தேர்தல் பா துகாப்பு..

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (15.11.2019) மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்குரிய வவுனியா மாவட்டத்தில் தேர்தலுக்குரிய சகல பூர்வாங்க ஏற்பாடுகளுக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 117,333 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 142 வாக்களிப்பு நிலையங்களில் உருவாக்கப்பட்டுள்ள.

இவ்வாறு உருவாக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வவுனியா கிழக்கில் 21 நிலையங்களும், வவுனியாவில் 80 நிலையங்களும், வவுனியா தெற்கில் 11 நிலையங்களும் , வெங்கள செட்டிக்குளத்தில் 25 நிலையங்களும் , வெலிஓயாவில் 5 நிலையங்களும் அமைக்கப்பெற்று சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த வாக்களிப்பு நிலையங்களுக்காக 1728 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் கடமைக்கு சென்றவண்ணம் உள்ளனர்.

மேலும் வவுனியா மாவட்ட வாக்காளர்கள் நேரத்திற்கு வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்களது வாக்களிப்பை மேற்கொள்ளவும்.

வாக்களிப்பானது நாளை (16.11.2019) காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5.00 மணிக்கு நிறைவு பெறவுள்ளது. அவ்வாறு நிறைவு பெற்றதுடன் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு எடுத்துவரப்படுவதுடன் தபால் மூல வாக்கென்னும் பணிகள் நாளையதினம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன்,

ஏனைய வாக்கெண்ணும் பணிகள் மாலை 7.00 மணியிலிருந்தும் ஆரம்பிக்கப்படும். இதற்காக 20 வாக்கெண்ணும் நிலையங்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இதற்காக 1871 பொலிஸ் உத்தியோகத்தர்கள் , 142 அதிரடிப்படையினர், 142 சி.டி.எப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.