வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!!

327


வாக்களிப்பு



இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று (16.11.2019) நடைபெற்று வரும் நிலையில் வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றார்கள்.



குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதுடன் நகர்ப்புறங்களில் வாக்களிப்பானது மந்தகதியில் நடைபெற்று வருகின்றது.




குறிப்பாக வைரவப்புளியங்குளம், குருமன்காடு, மற்றும் வவுனியா நகர்ப்புறங்களில் அமைந்துள்ள சில வாக்களிப்பு நிலையங்கள் அதிகாலை தொடக்கம் மக்கள் மந்தகதியிலேயே வாக்களித்து வருகின்றனர்.


வவுனியாவில் 182 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு முப்ப டையினர் உட்பட 2155 பாது காப்புப் ப டையினர் பா துகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் தேர்தல் கடமையில் 1728 அரச உத்தியோகத்தர்களும் பணியாற்றி வருகின்றனர்.

வவுனியாவில் இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.


வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தேர்தல் க ண்காணிப்பாளர்களும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் மதியம் 12.00 மணிவரை எந்தவிதமான வ ன் முறைச் சம்பவங்களும் பதிவாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவில் வாக்களிப்புக்கு சாதகமான காலநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.