வவுனியா மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் மீது இ னந்தெரியாதவர்கள் தா க்குதல்!!

500

வவுனியா மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் பி.ஏ.கருணாதாச மீது இனந்தெரியாத நபர்கள் இன்று (18.11) மாலை தா க்குதல் மேற்கொண்டதில் கா யமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நாட்டில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில்,

குறித்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர் ஐ.தே.க அமைப்பாளர் கருணாதாசவின் வீட்டின் முன்னால் வெ டி கொழுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்து வெளியே வந்த அமைப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சிகிச்சை பெற்றுவரும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பி.ஏ. கருணாதாச தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.