வவுனியாவில் கருணா : இ ரகசிய மு காம்களோ இ ரகசிய கை திகளோ இல்லை : தேசியத் தலைவரும் இ றந்துவிட்டார்!!

518

வவுனியாவில் கருணா

அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று பார்வையிட்டதாகவும் அதன்பிரகாரம் இ ரகசிய முகாம் அல்லது இ ரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வி டுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் இ றந்துவிட்டார் என கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். அது ஒரு சிறு பி ரச்சனை. இந்த 134 பேரும் சாதாரண போராளிகள். இது ஒரு பா ரிய பி ரச்சனையாக உலகளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதனை நாம் கோட்டாவிடம் தெரிவித்துள்ளோம். நாம் நிச்சயமாக விடுவிப்போம் என எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே அதில் உள்ள சட்ட சி க்கல்கள் தீர்க்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

கா ணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றார்களா என்பதை அரச தலைவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதனையும் கோட்டாவிடம் நாம் எதிர்பாக்கிறோம் அல்லது கா ணாமல் ஆக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட வருடத்திற்கு பின்னர் அவர்களிற்கு ம ரண அத்தாட்சி கொடுத்திருக்க வேண்டும்.

நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச் சாலைகளையும் அவதானித்துள்ளேன். அதன்படி இ ரகசிய மு காம் அல்லது இ ரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

அந்த விடயத்தில் தெளிவான முடிவை எமது மக்களுக்கு நாம் வழங்கவேண்டும். இதையும் பெ ரிய பிரச்சனையாக்கிக் கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஒரு வே தனையான விடயமே.

எனது சகோதரனும் கா ணாமல் ஆக்கபட்டுள்ளார். அவர் ம ரணமடைந்து விட்டார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவரது உடலை நாம் எடுக்கவில்லை. அதற்காக அவர் இருக்கிறார் என்பதை நாம் நம்பவில்லை. போ ரில் அனைத்து பக்கமும் பிழை நடந்துள்ளது. கொ லை செய்யாதவர் எவரும் இல்லை.

இது போ ர் நடந்த பூமி. எனவே நாம் வருந்துகிறோம் என மன்னிப்பு கோரவேண்டும். இதற்கு அரச தலைவரே பொறுப்பு கூறவேண்டும். அதை விட்டு போ ரில் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

இறுதிப் போ ரில் வெள்ளைக் கொடியுடன் ச ரணடைந்தார்களா இல்லையா என்பது கேள்விக்குறிதான். அப்படி நடந்து அரசு அதை மீறி செயற்பட்டிருந்தால் அது க ண்டிக்கப்பட வேண்டும்.

எனினும் அந்த விடயம் எந்த அடிப்படையில் கூறப்படுகிறது என்பதை ஏற்க முடியாது. எனினும் போ ர் இறுதிக்கட்டத்தை அடையும் போது இதனை நிறுத்துவதற்கான சந்தர்பம் பல இருந்தது. அது பயன்படுத்தப்படவில்லை. இறுதிகட்டத்தை நெருங்கும் போது ச ரணடைதல் என்பது காலம் கடந்த நடவடிக்கையாகதான் நான் பார்க்கிறேன்.

போரில் ஆ யிரக்கணக்கான மக்கள் கொ லை செய்யப்பட்டார்கள். அவர்கள் போ ரில் நெருங்கியே கொ லை செய்யப்பட்டார்கள். திட்டமிட்டு கொ லை செய்யப்படவில்லை. இதனை தமிழ் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பொதுமக்களை ம னித கே டயமாக பயன்படுத்தாமல் அவர்களை விடுவித்து விட்டு எமது போ ராளிகள் ம டிந்திருப்பார்களாக இருந்தால் உலகம் வரவேற்றிருக்கும்” என கூறினார்.