வவுனியாவில் கோழிக்குஞ்சு ஏற்றும் வாகனமாக மாறிய தனியார் பேரூந்து : மக்கள் விசனம்!!

9


வவுனியாவில்..


வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்தில் கோழிக்குஞ்சு மற்றும் மரக்கறிகளை ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி இன்று (21.11.2019) காலை 6 மணிக்கு புறப்பட்ட தனியார் பேரூந்தின் பின்புறமாகவுள்ள ஆசனங்களில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் செல்வதினால் பயணிகள் துர்நாற்றத்தினை சுவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.


காற்றின் காரணமாக கோழிக்குஞ்சுகளின் எச்சங்கள் பேரூந்துகளில் வீசப்பட்டு கால்களில் மிதிபட்டுவதினால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். அத்துடன் முதியவர்கள், பொதுமக்கள் ஆசனங்கள் இன்மையினால் நின்றபடியே தங்களது பிரயாணத்தினை தொடர்ந்தனர்.


இத் தனியார் பேரூந்து பிரயாணிகள் பேரூந்தா அல்லது கோழிக்குஞ்சுமற்றும் மரக்கறிகளை ஏற்றிச்செல்லும் வாகனமா என பயணிகள் கேள்வியெழுப்பினார்கள் பேரூந்தின் பின்பகுதியில் உள்ள ஆறு ஆசனங்களும் பொருட்கள் ஏற்ற பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.