வவுனியாவில் சுகாதார பரிசோதகரின் நடவடிக்கைக்கு இடையூறு : உணவக உரிமையாளருக்கு விளக்கமறியல்!!

23


வவுனியாவில்..


வவுனியா புளியங்குளத்தில் சுகாதார பரிசோதகரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,சகோதரருக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வவுனியா வடக்கு புளியங்குளம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வவுனியா வடக்கு பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா, புளியங்குளம் வடக்கு சுகாதார பரிசோதகர் நிசாந்தன் ஆகியோர் சுகாதார பரிசோதனைக்காக சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.


இதன்போது சுகாதார சீர்கேடு காணப்பட்டதாக சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஹோட்டலுக்கு எ திராக சட்ட நடவடிக்கைக்காக பதிவு செய்த போது அவ் உணவகத்தில் நின்ற அதன் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் சகோதரர் ஆகிய இருவரும் சுகாதார பரிசோதகர்களுடன் மு ரண்பட்டு அவர்களது நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து சுகாதார பரிசோதகர்கள் புளியங்குளம் பொலிசில் செய்த அரச உத்தியோகத்தரான தமது செயற்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தியதாக செய்த முறைப்பாட்டையடுத்து ஹோட்டல் உரிமையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், ஹோட்டல் உரிமையாளரின் சகோதரனுக்கு நீதிமன்றால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார சீர்கேடு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளனர்.