பெண்ணின் இடுப்பில் செலுத்தப்பட்ட ஊசி : ஸ்கேனில் தெரிந்த அ திர்ச்சிக் காட்சி!!

17


தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் இடுப்பில் போடப்பட்ட ஊசி உ டைந்து அ வரின் உ டலுக்குள் சிக்கியுள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் பார்வதி. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அ வதிப்பட்ட பார்வதி அங்கிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவரை மருத்துவர் பரிசோதித்த பிறகு இடுப்பில் ஊசி போட்டிருக்கிறார். அப்போது ஊசி உடைந்து பார்வதியின் உடலுக்குள் சிக்கியிருக்கிறது.அதுகுறித்து கேட்ட பார்வதியிடம், அப்படி எதுவும் இல்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துள்ளனர். அதன்பிறகு வ லியால் பார்வதி அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

இந்தநிலையில் அவரின் வீடு தேடி வந்த மருத்துவர்கள் பார்வதியை சி கிச்சைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.


அப்போது ஸ்கேனில் உடைந்து போன ஊசியின் ஒரு பகுதி பார்வதியின் உடலில் சிக்கியிருந்தது தெளிவாக தெரிந்துள்ளது. மேலும் ஊசியின் உடைந்த பக்கம், சிறிது ஆழத்திற்கு சென்றுவிட்டதாகவும் கூறிய மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர்.

ஆனால் சிதம்பரம் சென்று சிகிச்சைபெறும் அளவிற்கு போதிய வசதி இல்லை என பார்வதி வேதனை தெரிவிக்கிறார்.


மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் அ லட்சியத்தால் இக்கட்டில் சிக்கியுள்ள பார்வதி ஊசியை அகற்ற அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.