வவுனியாவில் 450 முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு!!

34


முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு


ஆசிரியர் தினமும் முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும்’ இன்று (22.11.2019) வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றது.நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.


முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.


வவுனியாவில் முதல்முறையாக 450 ற்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களால் கலை, கலாசார நிகழ்வுகள் நடாத்தப்பட்டது. அதிதிகளால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் தர்மபாலன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.