வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா!!

5


26 வது கலை விழா


சுத்தானந்த இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா நிகழ்வு இன்று (23.11.2019) சுத்தனந்த மன்றத்தின் தலைவர் கலாநிதி. நா.அகளங்கன் தலைமையில் நடைபெற்றது.சுத்தானந்த இந்து இளைஞர் நடராசா மண்டபத்தில் நடைபெற்ற கலைவிழா நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலாபூசணம் கந்தையா கனகேஸ்வரன் மற்றும் கலாபூசணம் விமலலோஜினி கனகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


முன்னதாக அதிதிகள் பாடசாலை சிறார்களால் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து, வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரத குரு சிவசிறி மு.க.கந்தசாமி குருக்களின் ஆசிச் செய்தியை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகியது.


சுத்தானந்தா பாலர் பாடசாலை கலைவிழா நிகழ்வில், பாடசாலை கீதம், வரவேற்பு நடனம், குழுப்பாடல், கரகம், வில்லிசை, நல்விருந்து. காவடி நடனம் மற்றும் கண்ணன் நடனம் போன்ற நிகழ்வுகளை சிறார்கள் திறம்பட நிகழ்த்தியிருந்தனர்.

நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றார்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.