சகதியில் புரண்டு போட்டோஷூட் : வைரலாகும் திருமண ஜோடி!!

1


வைரலாகும் திருமண ஜோடி


திருமணமான இளம்ஜோடி ஒன்று சகதியில் புரண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் பல்வேறு கோணங்களில், புதிய ஆடைகளில் நேர்த்தியான இடங்களைத் தேர்தெடுத்து போட்டோஷூட் நடத்துவது இந்தக்கால ஜோடிகளின் புதிய வழக்கமாகவே இருந்து வருகிறது.அதிலும் கேரள மாநிலத்தில் திருமணத்திற்கு முன்னர், பின்னர் என என வினோதமான முறையில் போட்டோஷூட் நடத்துவார்கள்.


தம்பதிகள் எப்போதுமே மறக்கமுடியாத மற்றும் தனித்துவமான ஒன்றைத் தேடுவதால், நிறுவனம் இந்த அசாதாரண கருப்பொருளைக் கொண்டு வந்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் பினு சீன்ஸ் கூறியுள்ளார்.


இதுகுறித்து இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் எப்போதும் வெவ்வேறு பாணியிலான படங்களை படம் பிடிப்பதால் இந்த கருப்பொருளை (மண் காதல்) தேர்ந்தெடுத்தேன்.

பெரும்பாலும் எங்கள் வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு தங்கள் மனதில் தங்கியிருக்கும் காதல் படங்களை எதிர்பார்க்கிறார்கள்.

சகதியில் போட்டோஷூட் நடத்துவது திருமண புகைப்படத் துறையில் முதல் முறையாகும். இந்த புகைப்படம் கேரளாவின் அழகில் படம்பிடிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

ஜோஸ் மற்றும் அனிஷா ஆகியோரைக் கொண்ட இந்த மண் போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு சேற்று வயலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து இணையதளவாசிகள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஜோஸ் பிரித்தானியாவில் ஒரு அ ரசியல்வாதியாகவும், அவருடைய மனைவி அனிஷா அதே நாட்டில் செவிலியராகவும் பணிபுரிந்து வருகின்றார்.