வவுனியா பிரதேச கலாசார விழா!!கலாசார விழா


வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா பிரதேச செயலகமும, கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த கலாசார விழாவானது நேற்று(28.11) வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்து கொண்டார்.


கௌரவ அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜ குகனேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ்,


மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி கிருஷ்ணானந்தன் ஆகியோருடன் துறைசார் கலைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் கலை, கலாசார நிகழ்வுகளுடன் கலைஞர் கௌரவிப்பும் ‘வவுனியம்-3’ நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது.

இலக்கிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.