வவுனியாவில் பல இடங்களில் மின்தடை : பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிப்பு!!

605

மின்தடை

வவுனியாவில் நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் இன்று (06.12.2019) அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 10 மணிவரையிலான காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

வவுனியா வேப்பங்குளம், நெளுக்குளம், புளியங்குளம், போகஸ்வெவ, பூவரசங்குளம், செட்டிக்குளம் போன்ற பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இவ் விடயம் தொடர்பாக மின்சார சபையின் வடமாகாண தலமைக் காரியலாயத்தினை தொடர்பு கொண்டு கேட்டபோது,

வவுனியாவில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மின்தடங்கல் ஏற்படுவதாகவும் அதனை எமது ஊழியர்கள் விரைந்து நிவர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.