பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான குழந்தை!!

896

அழகான குழந்தை

பிரித்தானியாவில் ஒன்றாக வாழ்ந்து வந்த பெண் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிரித்தானியாவின் Essex நகரின் Colchester பகுதியை சேர்ந்தவர்கள் Donna-Jasmine Francis-Smith. இவர்கள் இருவரும் பெண் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதால் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்த நிலையில், இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், முதலில் Donna-வின் கருமுட்டையில் நன்கொடையாக வாங்கப்பட்ட ஆணின் விந்தணு செலுத்தப்பட்டது. அதன் பின் டோனாவின் கருமுட்டையை எடுத்து, Jasmine Francis-Smith-ன் கருப்பைக்குள் வைத்துள்ளனர்.

இதனையடுத்து இருவரது கருமுட்டையையும், விந்தனுவையும் சேர்த்து கரு நன்றபடியாக வளர்ந்ததால், ஆரோக்கியமான ஆண் குழந்தையை இந்த தம்பதி பெற்றெடுத்துள்ளனர்.

உலகில் முதல் முறையாக பெண் ஓரினசேர்க்கை தம்பதியினர் ஒரு குழந்தைக்கு பெற்றோராக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.