வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையால் 4 வான் கதவுகள் திறப்பு!!

569

வவுனியா பாவற்குளத்தின்..

நீர் வரத்து அதிகரித்தமை காரணமாக வவுனியா, பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் இன்று காலை திறக்கப்பட்டது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டமானது 19 அடி 2 அங்குலமாக அதிகரித்துள்ளது.

19 அடி 4 அங்குலமே கொள்ளளவாக உள்ள நிலையில் நீர் வரத்து அதிகரித்தமையால் தீடிரென ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு அதன் நான்கு வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.

மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் தலைமையில் சென்ற நீர்பாசனவியலாளர்கள் பாவற்குளத்தின் நிலைமையை பார்வையிட்டதன் பின்னரே வான் கதவுகளை திறந்தனர்.

இதனால் பாவற்குளத்தில் கீழான பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்பாசன திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.