பெண்கள் ஆ ர்ப்பாட்டம்

வவுனியா, தேக்கவத்தை கிராமத்தில் போ தைப்பொருள் விற்பனை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்துமாருக் கோரி ஆ ர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேக்கவத்தை கிராமத்தில் இன்று காலை 11.30 மணியளவில் இந்த போ ராட்டம் இடம்பெற்றுள்ளது.

எமது வருங்கால சிறுவர்களை போ தைப்பொருளால் கெடுக்கப் போகிறீர்களா?, போ தைப்பொருளை எமது கிராமத்தில் இருந்து தடுப்போம் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆ ர்ப்பாட்டக்காரர்கள் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது தேக்கவத்தை கிராமத்தில் தொடர்ந்து போ தைப்பொருள் விற்பனை செய்து வருவதாகவும்,

இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரி பொலிஸாருக்கும், ஏனைய இடங்களுக்கும் அறிவித்தல் கொடுத்தும் இதுவரைக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சில வேளைகளில் க ஞ்சாவுடன் பிடிபடுகின்றவர்கள் இரண்டு, மூன்று நாட்களில் பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் வியாபாரத்தை செய்கின்றனர். இங்குள்ள சிறுவர்கள் உட்பட பெரியவர்களும் போ தைப்பொருள் அருந்திவிட்டு வீடுகளில் பாரிய பிரச்சினைகள் செய்கின்றனர்.

இதன்காரணமாக வீதிகளில் பாடசாலை சிறுவர்கள் மற்றும் பெண்கள் போகமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆ ர்ப்பாட்டத்தில் சுமார் 50இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டிருந்தனர்.





