வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பரீட்சைக்கு சென்ற மா ணவன் ப லி!!

972

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..

வவுனியாவில் இன்று (10.12.2019) காலை இடம்பெற்ற விபத்தில் பரீட்சைக்கு சென்ற மாணவன் ப லியாகியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

ஆசிகுளம் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்குச் சென்ற மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளார்.

வவுனியா கோமரசங்குளம் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களான ஆச்சிபுரத்தை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன், சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் பரீட்சை எழுதுவதற்காக மோட்டார் சைக்கிளில் பாடசாலை நோக்கி பயணித்துள்ளனர்.

அவ்வேளை அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆச்சிபுரத்தை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளார்.

மற்றைய மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தால் அப் பகுதியில் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியத்துடன், இச் சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.