வவுனியாவில் வீதியில் நின்றவர்களை மோதித் தள்ளிய கார் : மூவர் படுகாயம்!!

561

வீதியில் நின்றவர்களை..

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்களுடன் கார் ஓன்று மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று(12.12.2019) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து காளி கோவில் வீதியில் குருமன்காடு நோக்கிச் சென்ற கார் திருநாவற்குளம் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

ஆலயத்துக்கு அருகில் இருந்த மரக்கறி கடை முன்பாக மூன்று மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றுடன் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டது.

இதன்போது அவ்விடத்தில் நின்ற மூவரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.