விழிப்புணர்வு ஊர்வலம்

வவுனியா மாவட்ட செயலகமும் ஒபர் சீலோன் மற்றும் பொஸ்டோ நிறுவனமும் இணைந்து USAID மற்றும் UNDP நிறுவனங்களின் நிதி அனுசரணையுடன் சமத்துவமான தலைமுறை,

வ ன்பு ணர்வுக்கு எ திராய் எழுந்து நிற்போம் எனும் தொனிப்பொருளில் 16 நாட்கள் செயல்வாத விழிப்புணர்வு (கார்த்திகை -25 – மார்கழி 10,2019) ஊர்வலம் இன்று (13.12.2019) மதியம் 2 மணியளவில் இடம்பெற்றது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் செம்மஞ்சள் நிற குடையுடன் வவுனியா மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமான விழிப்புணர்வு பேரணியானது வவுனியா மாவட்ட செயலக உள்ளக வீதியூடாக மாவட்ட செயலக கேட்போர் கூடத்தினை சென்றடைந்து கேட்போர் கூடத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், சட்டத்தரணி பகீர் முகமட் கிஸாம், என்.வைதேசி (UNDP) , எஸ்.சூரியகுமாரி(OFERR), பா.செந்தில்குமரன் (பொஸ்டோ) மற்றும் விருந்தினர்களாக,

நகரசபை உறுப்பினர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் , பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





