வவுனியாவில் ம து அருந்திவிட்டு இளைஞர்கள் அ ட்டகாசம் : பிரதேச செயலாளருக்கு மகஜர்!!

730

பெரியதம்பனை

வவுனியா – வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிலுள்ள பெரியதம்பனை பகுதியிலுள்ள க ள்ளுத் த வறணையில் ம து அருந்தும் இளைஞர்கள் கிராமத்திற்குள் பல்வேறு அ டாவடித்தனங்களை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.

எனவே குறித்த க ள்ளுத் தவறணையை உடனடியாக அப்புறப்படுத்த கோரி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். அந்த மகஜரில், புளியங்குளம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏழாவது கிளையானது எமது பெரியதம்பனை பகுதியில் கிராமத்தில் க ள்ளுத் தவறணை இயங்கி வருகின்றது.

குறித்த க ள்ளுத் தவறணையானது கிராம மக்களினதும் கிராம மட்ட நலன்புரி அமைப்புக்களினதும் எமது பகுதி கிராம அலுவலகரின் கட்டளையையும் மீறி இயங்கி வருகின்றது. குறித்த க ள்ளுத் தவறணையில் வெளியிடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட போத்தல் க ள்ளு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கிராம உற்பத்தி க ள்ளினை விற்பனை செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த க ள்ளுத் தவறணையில் தற்போது போத்தல் க ள்ளு பெருவாரியாக இறக்கி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மிகவும் வறுமையில் வாடும் இக்கிராம மக்களின் வாழ்வாரத்தை மேலும் சீ ரழிக்கும் இந்த செயலானது கண்டிக்கத்தக்கது.

ம துப்பி ரியர்கள் க ள்ளிணை அருந்திவிட்டு கிராமத்திற்குள் பற்பல அ டாவடித்தனங்கள் செய்தும் குடும்ப பொருளாதாரத்தை திட்டமிட்டு சீ ரழிக்கும் செயற்படும் வளர்ந்து வரும் இளம் சமூகம் சிறுவயதிலேயே துர்நடத்தைகளில் ஈடுபடுவதற்கும் மேலும் பல காரணங்ளை உருவாக்கும் நடவடிக்கையாகவும் அமைந்துவிட்டது.

உடனடியாக க ள்ளுத் தவறணையை அப்புறப்படுத்தி கிராமத்தையும் அதனை சுற்றியுள்ள கிராமத்தின் மக்களின் பா துகாப்பினையும் பாதுகாத்திட தாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான புளியங்குளம் பனை, தென்னை வள கூட்டுறவுச் சங்க பெரியதம்பனை ஏழாம் இலக்க க ள்ளுத் தவறணையின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துமாறும் எமது கிராம மக்களின் வேண்டுகேளாக 159 கிராம மக்கள் கையொப்பமிடப்பட்ட பெயர் பட்டியலையும் அத்துடன் இணைத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.