வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூராக காணப்படும் மரம்!!

561

இடையூராக காணப்படும் மரம்

வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா – மன்னார் பிரதான வீதியில் காணப்பட்ட மரம் ஒன்று கடந்த 04.12.2019 அன்று முறிந்து வீழ்ந்தமையினால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அப்பகுதி மக்கள் தாமாக முன்வந்து போக்குவரத்துக்கு இடையூராக காணப்பட்ட மரத்தினை அகற்றி வீதி ஓரத்தில் போட்டனர்.

எனினும் இரு வாரங்கள் கடந்த நிலையிலும் வீதி ஓரத்தில் காணப்பட்ட மரம் அவ்விடத்திலிருந்து அகற்றப்படாமையினால் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.