வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நாளை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழா!!

759

1

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நாளை (16.01) மதியம் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.க.தனபாலசிங்கம் தலைமையில் தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சீ.சத்தியசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக உதவி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி.சுகந்தி செபஸ்ரியன் அவர்களும் கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.S.அன்ரன் சோமராஜா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள இவ் விழாவில் தமிழர் பாரம்பரிய மற்றும் மரபைப் பறைசாற்றும் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள். இவ் விழாவிற்கு வவுனியா நெற் இணையம் ஊடக அனுசரணை வழங்குகின்றது.

2