வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர் ம ரணம்!!

587

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..

வவுனியா நகர்ப்பகுதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உ யிரழந்துள்ளார். விபத்தில் காயமடைந்து யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் நேற்றையதினம் ம ரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் துவிச்சக்கரவண்டியில் வீதியில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே விபத்து இடம்பெற்றது. விபத்தில் படுகாயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் மேலதிக சிகிச்சைகளிற்காக மறுநாள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்தின் பின்னர் அவர் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியா பண்டாரிக்குளம் பகுதியினை சேர்ந்த சண்முகநாதன் வாசுதேவன் என்னும் 48 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்தவராவார். இவ் விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.