குளத்திற்கு மீன்பிடிக்க..

வவுனியா உளுக்குளம் பகுதியில் ஆணொருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (19.12.2019) அதிகாலை குளத்திற்கு மீன் பிடிக்க சென்ற 57 வயதுடைய ஜி.விஜயசிறி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் மீன் பிடிப்பதற்கு சென்ற விஜயசிறி என்பவர் நீண்டநேரமாக வீடு திரும்பவில்லை. இந்நிலையில், ஊர்மக்கள் தேடிச் சென்ற போது உளுக்குளம் குளத்தினுள் மிதந்த நிலையில் ச டலம் காணப்பட்டதை தொடர்ந்து உளுக்குளம் பொலிஸரால் மீ ட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை ச டலம் மரண ப ரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.






