வவுனியாவில் நிதி நிறுவன ஊழியர்களால் கு ழப்பநிலை!!

526

வவுனியாவில்..

குத்தகைக்கு வழங்கப்பட்ட வாகனத்தை மீட்கவந்த நிதி நிறுவன ஊழியர்களால் வவுனியாவில் சற்று நேரம் கு ழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா, தர்மலிங்கம் வீதி சந்தியில் இன்று மாலை இந்த குழப்ப நிலை தோன்றியுள்ளது.
நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் கிராம சேவகர் ஒருவர் குத்தகை முறையில் கார் ஒன்றை கொள்வனவு செய்திருந்ததார்.

அவர் காருக்கான வாடகை பணத்தை சில மாதங்களாக செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற வாகனத்தினை மீட்கும் ஊழியர்கள் குறித்த காரினை தம்மிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். இதன்காரணமாகவே கு ழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் காரின் உரிமையாளரான கிராம சேவகர் கருத்து தெரிவிக்கையில், தனது காரை விலைக்கு வாங்கும் நோக்குடன் இன்று சிலர் வந்து அதனை ஓட்டிபார்க்க கேட்டனர். நான் ஓட்டிப்பார்க்க அனுமதித்த நிலையில் அவர்கள் அதனை செலுத்தி வவுனியா நகர் பகுதி வரை சென்றதுடன், தாம் நிதி நிறுவனத்தினர் என்று தெரிவித்து காரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர்.

நான் அதற்கு ம றுப்பு தெரிவித்ததுடன், வாடகை பணத்தில் ஒரு தொகையை நேற்றையதினம் செலுத்தியதாகவும், மீதி பணம் வருகின்ற நாட்களில் செலுத்த இருந்தநிலையில் காரினை மீட்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர் என கூறியுள்ளனர்.

எனினும், நிதி நிறுவன ஊழியர்களும் விடாப்பிடியாக நின்ற நிலையில் காரின் உரிமையாளரான கிராமசேவகர் காரை விட்டு இறங்காமல் உள்ளேயே இருந்தார்.

இதனால் குறித்த பகுதியில் சற்று நேரம் குழப்ப நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாரும் வருகை தந்துள்ளனர்.

பொலிஸார் இரு தரப்புடனும் கலந்துரையாடியதையடுத்து காரை உரிமையாளரையே எடுத்துசெல்லும் படி பொலிஸார் பணித்திருந்தனர். பின்னர் நிலமை சுமூகமாகியிருந்தது.