வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்திய பொலிசாரினால் ப தற்றநிலை : பொதுமக்கள் மு ற்றுகை!!

590

விபத்தினை ஏற்படுத்திய பொலிசாரினால்..

வவுனியா மன்னார் வீதி பண்டாணிச்சூர் 5ம் ஒழுங்கைக்கு முன்பாக பொலிஸாரின் செயற்பாட்டினையடுத்து பொதுமக்கள் மு ற்றுகையிட்டமையினால் இன்று (26.12.2019) மாலை 6.30 மணியளவில் ப தற்றமான நிலமை காணப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கில் பட்டாணிச்சூர் 5ம் ஒழுங்கைக்கு அருகே வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கில் மீது மோ துண்டு விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து விபத்துக்குள்ளான பொலிஸார் “நீ செய்வதினை செய் நான் செய்வதினை செய்கின்றேன்” என குறித்த இளைஞனை அ ச்சுறுத் தியமையினையடுத்து பொதுமக்களின் அவ்விடத்தினை மு ற்றுகையிட்டனர் இதனால் அவ்விடத்தில் ச ற்று ப தற்றமான நிலை காணப்பட்டது.

அவ்விடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் அவசர பொலிஸ் சேவைக்கு தெரியப்படுத்தியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மற்றும் அவசர பொலிஸ் பிரிவினர் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிலையும் மோட்டார் சைக்கிலின் சாரதிகளையும் பொலிஸார் வவுனியா பொலிஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அதனையடுத்து பொதுமக்கள் வீதியினை விட்டு விலகி சென்றமையினால் ப தற்ற நிலமை வழமைக்கு திரும்பியது.