வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி சுலக்சனா சாதனை : சாதனைக்கு வறுமை தடையல்ல!!

827

மாணவி சுலக்சனா

பாடசாலை தினசரி இரண்டு கிலோமீற்றர் தூரம் துவிக்கச்கரவண்டியில் சென்று கல்வி கற்றே நான் இந்த நிலமையினை அடைந்துள்ளேன். சாதனைக்கு வறுமை தடையல்ல என வவுனியா மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலாவது இடத்தினை பெற்ற மதனமோகன் சுலக்சனா தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த மதனமோகன் சுலக்சனா 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார். தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரையில் புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் தான் கல்வி கற்கு வருகின்றேன். எனது வீட்டிலிருந்து தினசரி 2 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் பயணித்து தான் பாடசாலை சென்று கல்வி கற்றேன்.

நான் அம்மம்மா மற்றும் சித்தியுடன் இருந்து தான் கல்வி கற்கு வருகின்றேன். என்னை படிப்பித்தது முழுவதுவே அவர்கள் தான் அத்துடன் எனது எதிர்கால இலட்சியமாக வைத்தியராக வரவேண்டும் என்பது அதன் முதற்கட்ட படியினை தற்போது நான் அடைந்துள்ளேன்.

அத்துடன் அனைத்து மாணவர்களும் உற்சாகமாக படித்தீர்கள் என்றால் நீங்களும் சிறந்த பேறுபேற்றினை அடைய முடியும் என தெரிவித்தார்.

குறித்த மாணவி கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.