வவுனியாவில் வீதிக்கு இறங்கிய பெண்கள் அமைப்புக்கள் : வர்த்தக சங்கம் அதிரடி நடவடிக்கை!!

795

வீதிக்கு இறங்கிய பெண்கள்

வவுனியா நகர்வாழ் அன்பான வர்த்தக பெரு மக்களே உங்கள் பெண் பணியாளர்கள் உங்கள் கண்மணி ஆனவர்கள் அவர்களை பா துகாக்கும் இமைகள் நீங்களே எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.

பெரியார்குளம் , பூந்தோட்டம் கிராம பெண்கள் அமைப்பின் ஒருங்கினைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விழிப்புணர்வு பேரணியானது வவுனியா வாடி வீடு முன்றலில் இன்று (28.12.2019) காலை ஆரம்பமாகி புகையிரத நிலைய வீதியுடாக பஜார் வீதி,

தர்மலிங்கம் வீதி, ஹொரவபொத்தானை வீதியூடாக சென்று வர்த்தக நிலையங்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுமும் கையளித்தனர்.

இப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் உரிமைகள் உண்டு பெண் பணியாளர்களுக்கு அதனை காக்க கடமைகள் உண்டு உங்களிற்கு, து ன்புறுத் தல்களின்றியே பெண் பணியாற்றினால் அவர்கள் இன்புற பணியாற்றி இலாபம் பெருகுமே ,

ஆண்களிற்கு சரிநிகர் சமானமென்றால் ஏன் பெண் பணியாளர்களிற்கு மட்டும் பராபட்சம்?, தலை நிமிர்ந்து பெண்கள் பணி புரிந்தால் உங்கள் நிலை உயர்ந்து நிற்கும் தரணியிலே போன்ற பல்வேறு பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.

விழிப்புணர்வு பேரணியானது இறுதியாக வர்த்தக சங்கத்தினரிடம் சென்றடைந்தனர். இதன் போது வர்த்தக சங்கத்தினர் அவர்களை அழைத்து கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு குளிர்பானமும் வழங்கினார்கள்.

குறித்த சந்திப்பின் போது பெண்கள் அமைப்பினர் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துமாறு கோரி வவுனியா வர்த்தக சங்கத்தினரிடம் மகஜர் கையளித்தனர்.

இதன் போது வர்த்தக சங்கத்தின் யாப்பில் வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்துவதுடன் பிரச்சனை ஏற்படுமிடத்து அவற்றினை ஆராய்து பொருந்தமான தீர்வினை காண வேண்டும் என உள்ளது.

எனவே ஊழியர்கள் நலன் சார் விடயங்களை மீறும் வர்த்தக நிலையங்களுக்கு எ திராக இனிவரும் காலங்களில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வர்த்தக சங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.