வவுனியாவில் ஈ-கற்றல் நிலையமும், சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும்!!

180


சாதனையாளர்கள் கௌரவிப்பு


வவுனியாவில் ஈ-கற்றல் நிலையமும், சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் ‘கல்வியால் எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று (29.12.2019) நடைபெற்றது.வவுனியா திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் மண்டபத்தில் வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி திருமதி. திருமகள் திருவருட்செல்வன் கலந்துகொண்டு ஈ-கற்றல் நிலையத்தை திறந்து வைத்தார்.


இக்கற்றல் நிலையமானது சமத்துவத்திற்கும் நீதிக்குமான மத்திய நிலையம், தமிழ் தேசிய இளைஞர் கழகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றின் பங்களிப்புடன் நிறுவப்பட்டது.

நிகழ்வின் முன்னதாக அதிதிகள் மாலை போட்டு வரவேற்றகப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

விளையாட்டில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள், புலைமைப்பரிட்சைப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை புரிந்த மாணவர்கள் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் திருநாவற்குளம் கிராமத்தின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வானது திருமதி. தமிழ் செல்வன் அன்னலதா தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.

நிகழ்வில் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான கெ.சந்திரகுலசிங்கம் மோகன், கிராம உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.