வவுனியாவில்..

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெ ரோயின் போ தைபொ ருளை பஸ்ஸில் க டத்திச்சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற பஸ்ஸை நேற்று இரவு 10.30 மணியளவில் செட்டிகுளம் நகர் பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வழிமறித்த இராணுவம் மற்றும் பொலிஸார்,

அவ்விடத்தில் சோதனைகளை மேற்கொண்ட போது ஒரு கிலோ ஹெ ரோயின் போ தைப்பொ ருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் முழங்காவில் பூநகரியை சேர்ந்த 24 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கடந்த நான்கு தினங்களிற்கு முன்னரே மத்திய கிழக்கு பகுதியில் இருந்து இலங்கை வந்ததுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நடவடிக்கையில் செட்டிகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப்குமார மற்றும் பொலிஸார், செட்டிகுளம் காலாட்படை இராணுவம் (MIR) போன்றோர் முறியடிப்பினை மேற்கொண்டிருந்தனர்.




