வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் விழுந்த வாகனம் : நால்வர் காயம்!!

528

குளத்தில் விழுந்த வாகனம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கல்குண்டாமடு குளத்தினுள் விழுந்து மூழ்கியுள்ளது.

வவுனியா, கல்குண்டாமடுவில் இன்று(01.01.2020) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாக செயற்பட்டு வானிலிருந்து கீழே இறங்கியமையால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த வானில் 4 பேர் பயணித்த நிலையில் அவர்கள் சிறு காயங்களிற்கு உள்ளாகி, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.