வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கஜமுகா சூரன்போர்!!ஆதி விநாயகர் ஆலயத்தில்..


வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் கஜமுகா சூரன்போ ர் சிறப்பாக நேற்று(01.01.2020) மாலை இடம்பெற்றது.இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றே பிள்ளையார் பெருங்கதை. 20 நாட்கள் பிள்ளையார் பெருங்கதை இடம்பெற்று அடியார்கள் விரதம் அனுஸ்டித்து 21 ஆம் நாள் கஜமுகா சூரன்போ ர் இடம்பெறும்.


தீயவற்றை அழித்து நல்லவற்றைப் போதிக்கும் முகமாக கஜமுகா சூரனை விநாயகப் பெருமான் வ தம் செய்ததாக புராணக் கதைகள் கூறுகின்றன.


அந்தவகையில், வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயர் ஆலயத்தில் ஆலய பிரதமகுரு சஞ்சீவ காந்த குருக்கள் தலைமையில் பிள்ளையார் பெருங்கதையின் இறுதி நாயான நேற்று விசேட அபிசேகங்கள், பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ஆதி விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து வெளி வீதிக்கு காட்சி கொடுத்தார்.

அங்கு பக்த அடியார்களின் அரோகரா கோசத்திற்கும், மேளதாள வாத்தியங்கள், மயிலாட்டம், குதிரையாட்டம் என்பவற்றுக்கு மத்தியில் கஜமுகா சூரன்போ ர் இடம்பெற்றது.

பல்வேறு நிலைகளில் வலம் வந்த கஜமுகா சூரனை வ தம் செய்த விநாயகப் பெருமானம் பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.