வவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை!!

2


மரநடுகை


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் பசுமைத் திட்டத்தின் கீழ் புத்தாண்டு தினமான நேற்று (01.01.2019) வவுனியாவில் மரநடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது.ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டத்தின் கீழ் வவுனியாவில் பல பகுதிகளில் மரநடுகை இடம்பெற்றது.


வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா மரம் ஒன்றினை நாட்டி பசுமைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.


இதேபோல், வவுனியா பிரதேச செயலகம், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம் மற்றும் குருமன்காடு காளி கோவில் வீதி என்பவற்றில் இம் மரநடுகை இடம்பெற்றது. இதில் அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.