வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை!!

703

வரலாற்றுச் சாதனை

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட ஓமந்தை கோட்டத்தில் அமைந்துள்ள  சேமமடு சண்முகானந்தா வித்தியாலயம்  கடந்த வருடம் (2019)  நடைபெற்று  முடிந்த க.பொ.த.உயர்தர பரீட்சையில்  முப்பது வருடங்களின் பின்னர் மிகச் சிறந்த பெறுபேற்றினைப்  பெற்று  சாதனை படைத்துள்ளது.

இப் பாடசாலையில் இருந்து கலைப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய  ஆறு மாணவர்களும்  100% சித்தியடைந்து   பல்கலைகழகத்திற்கு தெரிவாகும்  வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்களில் சி.அஸ்வினி என்ற மாணவி – 2A,B  பெறுபேற்றுடன்  மாவட்ட மட்டத்தில் ஏழாமிடத்தை பெற்றுள்ளார். மேலும், வி.வினோதினி -2A,B       மாவட்ட நிலை -28, செ.கம்சிகா- 2A,B மாவட்ட நிலை-29, ச.தனுசன் – 2A,C மாவட்ட நிலை-60, இ.இளங்கீரன் – A,2B மாவட்ட நிலை-92, ச.விந்துசன் – A,B,C          மாவட்ட நிலை-113 பெற்றுள்ளனர்.

பாடசாலையின் அதிபர் பொ.கணேசலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களான திரு.சி.ஸ்ரீ சங்கர சர்மா புவியியல் பாடத்தினையும், திருமதி.சந்திரிக்கா மற்றும் மேலதிகமாக E.S. வரதன் அவர்களும் தமிழ் பாடத்தினையும்  கற்பித்திருந்தனர்.

பாடசாலையில்  இந்து நாகரீக பாடத்துக்கான ஆசிரியர் இல்லாத நிலையில்  பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதி அனுசரணையுடன்  திரு.ரதிக்குமார் ஆசிரியர் மாணவர்களுக்கு இந்துநாகரீக பாடத்தை கற்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.