வவுனியாவில் பெண்கள், ஊழியர்களுக்கு எதிரான வ ன்முறை களுக்கு எதிராக போ ராட்டம்!!

336

வவுனியாவில்..

“பெண்கள், ஊழியர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட உள்ளுராட்டசி மன்ற பெண்கள் ஒன்றியம் , சிவில் சமூக அமைப்புக்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து போ ராட்டமொன்றினை முன்னேடுத்திருந்தனர்.

குறித்த போ ராட்டம் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (03.01.2020) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மிதிக்காதே மிதிக்காதே பெண் மீது மிதிக்காதே , உதைக்காதே உதைக்காதே பெண் என்ன உதைப்பந்தா, அடிக்காதே அடிக்காதே காலால் அடிக்காதே,

அவமதிக்காதே அவமதிக்காதே தொழிலாளர்களை அவமதிக்காதே போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் போ ராட்டத்தின் இறுதியில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக கண்டி வீதியூடாக வவுனியா நகரசபையை சென்றடைந்து வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இப் போ ராடத்தில் வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், நகரசபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.