வவுனியாவில் 826க்கு மேற்பட்டவர்களுக்கு டெங்கு நோய் தாக்கம் : விசேட செயல்திட்டம் முன்னெடுப்பு!!

364

டெங்கு நோய்

வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக 826 நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் வவுனியா நகர் முழுவதும் டெங்கு ஒழிப்பு விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட இரண்டாம் குருக்குத்தெரு, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, ஏ9 வீதி போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து காணப்படுவதினையடுத்து,

அதனை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த பகுதிகளில் மலேரியா தடுப்புப் பிரிவினரால் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை இன்று (10.01.2020) காலை 8.00 மணி தொடக்கம் 9.30 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியாவில் டெங்கு நுளம்பின் தாக்கம் ஆரம்பத்தினை விட தற்போது குறைந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம் தெரிவித்தார்.