வவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு!!

8


நர்த்தனாஞ்சலி


வவுனியாவில் யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் நிதிப் பங்களிப்புடன் நிருந்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி வழங்கிய நர்த்தனாஞ்சலி மாபெரும் கலை நிகழ்வு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்றையதினம் (12.01.2020) மாலை 4 மணிக்கு வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் கலந்து கொண்டிருந்ததுடன்,


சிறப்பு விருந்தினராக வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக, வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் மற்றும்,


கௌரவ விருந்தினர்களாக நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் விருந்தினர்களாக பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்க்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.

அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து, கணபதி வணக்கம், நடராஜர் வணக்கம், புஸ்பாஞ்சலி, குறள்வழி நடனம், சிரித்தாடி, பல்லியம் (இசை நிகழ்ச்சி), நாட்டியக்கலை, ஜதீஸ்வரம், குழலூதி போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இரவு 7.40 மணியளவில் விழா சிறப்புற நிறைவுற்றது.

இதன் போது பிரதம, கௌரவ விருந்தினர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான சான்றிதல்களையும் யாழ்.இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.