வவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்!!

71


பொங்கல் நிகழ்வுகள்


வவுனியாவில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தமிழர்களின் தை திருநாளாம் பொங்கல் தினமான இன்று மக்கள் தங்கள் வீடுகள் வர்த்தக நிலையங்களை அலங்கரித்து புத்தாடை அணிந்து தைப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திலும் பொங்கல் விசேட பூஜை ஆராதனை நடத்தப்பட்டது.


வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் மழை வீழ்ச்சி சிறப்பாக காணப்பட்டதினால் விவசாய பொருட்களின் விளைச்சல் சிறப்பாக இருந்தபடியால் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.