செவ்வாயில் கரட், தக்காளி கூட விளையுமாம்!!

616

Sevvai

செவ்வாய் கிரகத்தில் பல்வேறு தாவர இனங்களை பயிர் செய்யலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை ஒரு ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் செவ்வாய் கிரக மண்ணில் கரட், தக்காளி போன்ற தாவரங்கள் விளைவதை கண்டு வியந்ததாக தெரிவித்துள்ளனர்.

டச்சு பல்கலைகழகத்தை சேர்ந்த சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங் இது குறித்து தெரிவிக்கையில், செவ்வாய் மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின் செயற்கை மண்ணில் 14 தாவர இனங்களை பயிரிட்டு 50 நாட்கள் சோதனை நடைபெற்றது.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தும் விதமாக செயற்கை மணலில் பயரிடப்பட்ட சில தானியங்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து இருந்தது. தக்காளி மற்றும் கரட் வகைகள் கூட வளர்ந்து இருந்தன.

சோதனை முடிவில் 50 நாட்கள் கழித்தும் நிறைய தாவரங்கள் வாடாமல் இருந்தது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.