வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா!!கால்கோள் விழா


தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் கால்கோள் விழா வவுனியா பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றது.தேசிய ரீதியில் தரம் 1 இற்கு மாணவர்களை உள்வாங்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைவாக வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கால் கோள் விழா அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.


இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.தினேஸ், பழைய மாணவர் சங்க செயலாளர் ப.கார்த்திக் மற்றும் விருந்தினர்களாக பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குடியிருப்பு பிள்ளையார் ஆலய முன்றலிருந்து பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாண்ட் வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்ககேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகி விருந்தினர்கள் உரை, மாணவர்களின் கவிதை, நடனம், பேச்சு போன்றன இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியின் ஓய்வுபெற்று செல்லவுள்ள பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து அவரது சேவைக்கு மதிப்பளித்தனர்.